பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் கமல் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடிகர் நரேன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே கைதி படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.
நரேன் அளித்த பேட்டி: கமலின் நடிப்பை பார்த்து, சினிமாவிற்கு வந்தவர்களில் நானும் ஒருவன். நான் மட்டுமின்றி, இயக்குனரும் கமலுடைய பெரிய ரசிகர்கள். இன்று அவருடன் நான் நடிக்கப் போகிறேன் என்பது கனவு போல் உள்ளது. கைதிக்கு பின் இரண்டு படம் முடியும் தருவாயில் உள்ளது. நல்ல கதைகள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. அதனால் ஒவ்வொரு படத்திற்கும் இடைவேளை அதிகரிக்கிறது.
கைதிக்கு பின் நான் நடித்து வரும் படத்தில் ஆட்டிஸம் பாதித்த நபராக நடித்து வருகிறேன். வித்தியாசமான பாத்திரம். நடிப்பது சவாலாக இருந்தது. மற்றொரு படம் தமிழ், மலையாளம் இரண்டிலும் உருவாகிறது. கதிர், நட்டி நட்ராஜ், கயல்ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விரைவில் இரண்டு படங்களும் வெளியாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.