விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? | ஹாலிவுட் வெப் தொடர் ரீமேக்கில் சமந்தா | மற்றுமொரு சர்வதேச விருது பெற்ற ஆர்ஆர்ஆர் | வெற்றி கலைஞனாக கடைசி மூச்சு அடங்க வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம் | இந்தியாவில் முதல் முறை: சென்னை விமான நிலையத்தில் தியேட்டர் திறப்பு | தமிழ் நடிகையை சித்ரவதை செய்த கணவர்: பரபரப்பு புகார் | விஜய்யின் 67 வது பட பூஜை: வீடியோ வெளியானது |
நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்க சென்றது குறித்து டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை கஸ்தூரி. அதில், ‛‛கொரோனா தொற்று காரணமாக மே முதல் இந்தியர்கள் அமெரிக்கா வர அந்நாடு தடை விதித்துள்ளது. யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படாத நிலையில் ரஜினி மட்டும் எப்படி அமெரிக்காவிற்கு சென்றார். இதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
நான் இப்படி கேட்க காரணம், அமெரிக்காவில் பணிபுரியும், படிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே அமெரிக்கா திரும்ப அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனவே ரஜினியின் அமெரிக்க பயணம் ஒரு மர்மமாக உள்ளது. ரஜினி இந்திய அரசிடம் மருத்துவ விலக்கு பெற்றிருக்கலாம் என்கிறார்கள். இது கவலை அளிக்கிறது. காரணம், இந்திய மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கா அவரது உடம்பில் பிரச்சினை உள்ளது.
ரஜினி அங்கு சிகிச்சை பெறும் மயோ கிளினிக் இருதய பராமரிப்புக்குத் தானே பெயர் பெற்றது. இதை நினைக்க நினைக்க இன்னும் மோசமாக தோன்றுகிறது. தயவு செய்து விதிகள் ரஜினிக்கு பொருந்தாது என்று ரசிகர்கள் சொல்லாதீர்கள். பயங்கரமான விசயம் ஏதேனும் இருந்தால் அத்தகைய மிகப்பெரிய சட்டத்தை மதிக்கக்கூடிய குடிமகனாக வருவதற்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.