ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட அவர் உயர் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன் பின்னர் ஆண்டு தோறும் அமெரிக்காவில் உள்ள மயோ மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்வார். அதன்படி இந்த ஆண்டு மருத்துவ பரிசோதனைக்காக கடந்த19ம் தேதி அமெரிக்கா சென்றார். ஏற்கெனவே அமெரிக்காவில் இருக்கும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், அவரோடு இணைந்து கொண்டார்.
நேற்று ரஜினிக்கு மயோ மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடந்தது. இந்த சோதனை முடிந்து ரஜினி வெளிவரும் காட்சிகள் இணைய தளத்தில் புகைப்படங்களாக பரவியது. ரஜினியின் உடல்நிலை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கிறது. இன்னும் 3 வாரங்கள் வரை மருத்துவ கண்காணிப்பில் ஓய்வெடுத்து விட்டு அதன் பிறகு அவர் சென்னை திரும்புகிறார்.




