அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் |
நடிகர் பிரகாஷ்ராஜ் தெலுங்கு சினிமா நடிகர் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் கன்னடர் அவர் எப்படி தெலுங்கு நடிகர் சங்கத்தில் போட்டியிட முடியும் என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய பிரகாஷ்ராஜ், தெலுங்கரான விஷால் தமிநாட்டில் உள்ள நடிகர் சங்கத்தின் தலைவராகும்போது நான் இங்கு தலைவராக முடியாதா? என்று கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
நான் தெலுங்கில் நடிக்க வரும்போது யாரும் நான் வெளி மாநிலத்தவன் என்று சொல்லவில்லை. நான் இங்கே, சொத்துக்களை வாங்கியிருக்கிறேன். எனக்கு இங்கேயே வீடும் உள்ளது. எனது ஆதார் கார்டும் ஆந்திரா முகவரியில் தான் உள்ளது. எனது பிள்ளை இங்கேதான் படிக்கிறான். நான் ஆந்திராவில் 2 கிராமங்களைத் தத்தெடுத்திருக்கிறேன். அப்போதெல்லாம் யாரும் நான் வெளிமாநிலத்தவன் என்று சொல்லவில்லை.
தெலுங்கு பேசும் விஷால் தமிழ்நாட்டில் நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு ஜெயிக்கிறார் என்கிறபோது நான் ஏன் இங்கு போட்டியிடக் கூடாது? அந்தப்புரம் என்ற தெலுங்கு படம் தானே எனக்கு தேசிய விருது வாங்கித் தந்தது. தெலுங்கு படங்களில் நடித்துத்தானே 9 நந்தி விருதுகளை வாங்கினேன்.
30 ஆண்டு காலமாக நான் சினிமாவில் இருக்கிறேன். எனக்குப் பெயர், புகழ், பணம் எல்லாத்தையுமே தந்தது சினிமா தான். இதற்காக நான் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? அதனால் தான் இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறேன்.
நான் தெலுங்கு மண்ணில் வாழ்கிறேன். தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். அதனால் இந்தச் சங்கத்தில் போட்டியிடுகிறேன். என்னை யாரும் வெளி மாநிலத்தவனாக பார்க்கவும் கூடாது. பார்க்கவும் முடியாது. என்றார்.