ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் ஷங்கர். 'பாகுபலி' படங்கள் வந்த பிறகு ஷங்கரிடமிருந்த அந்தப் பெயர் தெலுங்கு இயக்குனரான ராஜமவுலிக்குப் போய்விட்டது.
தென்னிந்தியாவின் முதல் பிரம்மாண்ட இயக்குனர் தான்தான் என்பதை நிரூபிக்க ஷங்கர் அடுத்து தெலுங்கு, ஹிந்திப் பக்கம் தாவிவிட்டார். தனது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தை தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டுப் போய்விட்டார். நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகுதான் இப்படத்தின் நிலைமை என்னவென்று தெரியும்.
இதனிடையே, தெலுங்கு, ஹிந்தியில் அடுத்து இயக்க உள்ள படங்களுக்கான வேலைகளில் ஷங்கர் ஏற்கெனவே பிஸியாகிவிட்டார். தெலுங்கில் ராம் சரண் நடிக்க அவர் இயக்கப் போகும் படத்திற்கும், ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்க உள்ள 'அந்நியன்' பட ரீமேக்கிற்கும் பாலிவுட்டின் பிரபலமான நாயகியான கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்துள்ளாராம் ஷங்கர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கியாரா அத்வானியின் பிறந்தநாளான ஜுலை 31 அன்று வெளிவரும் என்கிறார்கள்.
தற்போது, “ஷெர்ஷா, பூல் புலையா, ஜக் ஜக் ஜீயோ' ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார் கியாரா.