பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
தெலுங்குத் திரையுலகத்தில் சில பல பிரம்மாண்டமான படங்கள் தயாராகி வருகின்றன. பொதுவாகவே, முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கும், பிரம்மாண்டமான படங்களுக்கும் தியேட்டர் வியாபாரத்தில் இருக்கும் போட்டி போலவே சாட்டிலைட் டிவி உரிமை, புதிதாக ஓடிடி தள உரிமை ஆகியவற்றிற்கும் கடும் போட்டி நிலவும்.
தெலுங்கில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் டிவியான ஸ்டார் மா, தெலுங்கில் இந்த வருடமும் அடுத்த வருடமும் வெளிவர உள்ள சில புதிய படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்கிக் குவித்துள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அந்த டிவி நேற்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் ராம் சரண் நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்', மகேஷ் பாபு நடிக்கும் 'சர்காரு வாரிபாட்டா', அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா', பாலகிருஷ்ணா நடிக்கும் 'அகாண்டா', ரவி தேஜா நடிக்கும் 'கிலாடி', நானி நடிக்கும் 'டக் ஜகதீஷ்', நிதின் நடிக்கும் 'மேஸ்ட்ரோ' நாக சைதன்யா நடிக்கும்' லவ் ஸ்டோரி', அகில் நடிக்கும் 'மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்', ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமைகளை பலத்த போட்டிக்கிடையில் வாங்கியுள்ளது.
இவ்வளவு பெரிய படங்களை அந்த டிவி வாங்கியுள்ளது திரையுலகத்தில் உள்ளவர்களுக்கும், மற்ற போட்டி டிவிக்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாம். விரைவில் வெளியாக உள்ள இப்படங்கள் ஸ்டார் மா டிவியில் ஒளிபரப்பாகும். இப்படங்கள் மூலம் தங்களது ரேட்டிங்கை அந்த டிவி மேலும் முன்னெடுத்துச் செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.