ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்யின் 65வது திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்களுடன் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
விஜய்யின் பிறந்தநாளையொட்டி இந்த படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் மாலை படக்குழு வெளியிட்டது. அதில் விஜய்யின் பெயரிடாத இப்படத்திற்கு 'பீஸ்ட்' என வித்தியாசமான பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
அதன்படி போஸ்டர் வெளியாகி 24 மணி நேரத்தில் இந்திய அளவில் அதிக லைக்குகளை பெற்றுள்ளது. இது மாஸ்டர் சாதனையை விட அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது. 'மாஸ்டர்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகபட்சமாக 2 லட்சத்து 71 ஆயிரம் லைக்குகளை பெற்றது. ஆனால் பீஸ்ட் படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர், 2 லட்சத்து 78 ஆயிரம் லைக்குகளை பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளது.