பிளாஷ்பேக்: ஒரே படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்த சிவாஜியும், பிரபுவும் | பிளாஷ்பேக்: மாப்பிள்ளையை வெற்றி பெற வைத்த சர்க்கஸ் காட்சிகள் | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில், 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' | 500 கோடி வசூலில் 'கூலி' | சச்சின் டெண்டுல்கர் ரசித்துப் பார்த்த '3பிஹெச்கே' | மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா |
பொதுவாக ஒரு நடிகை சினிமாவில் அறிமுகமானால் அவரது முதல் படம் வெளியாகி அவரது நடிப்பு அதில் எப்படி இருக்கிறது, திரையில் எப்படி தோற்றமளிக்கிறார், அந்த படம் வெற்றி பெற்றதா என்பதை பொறுத்துதான் அடுத்த படம் கிடைக்கும். ஆனால் ஸ்ரீதாராவ் என்ற நடிகை முதல் படம் வெளிவராத நிலையில் 3 படங்களில் நடித்து வருகிறார்.
ஐதராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரீதாராவ். அப்பா பிசினஸ் மேன். படிப்புக்காக சென்னையில் செட்டிலாகியிருக்கிறார். ஆனாலும் நடிப்பு மீதுதான் ஆர்வம். இந்தி, உருது நாடகங்களில் நடித்து வந்தவர், சின்னத்திரையில் நடிக்கும் ஆசையில் அதற்கான முயற்சியில் இருந்தபோது ஜாக்பாட் அடித்த மாதிரி சினிமா வாய்ப்பு கிடைத்தது.
முதல் படமே பிரபு சாலமன் இயக்கும் கும்கி 2. நூறு பேர் வரை ஆடிசன் செய்து ரிஜக்ட் செய்திருந்த நிலையில் ஸ்ரீதாராவை தேர்வு செய்திருக்கிறார் பிரபு சாலமன். நடிப்பை பார்த்து விட்டு அமலா பால் மாதிரி வருவாய் என வாழ்த்தி இருக்கிறார். இது தவிர விதார்த்துடன் ஆற்றல் என்ற படத்திலும், மிஷ்கின் இயக்கும் பிதா படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்கிற கனவுடன் இருக்கிறார் ஸ்ரீதாராவ்.