போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவைத் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என தனது கிளைகளை பரப்பி வருகிறார். அவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜகமே தந்திரம் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. ஆனால் அதை பற்றி எல்லாம் தனுஷ் கவலைப்பட்டது போல தெரியவில்லை. அடுத்து நடிக்கும் ஹாலிவுட் படம் மற்றும் கார்த்திக் நரேன் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. அதையொட்டி தனுஷ் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில் தந்தையர் தின வாழ்த்துக்கள், எப்போதும் குழந்தைகளின் முதல் ஹீரோ தந்தை தான். அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு தெரியும். லவ் யூ பசங்களா. நீங்கள்தான் எனது உலகத்தை அழகாக மாற்றினீர்கள் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.