விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் முடிந்தநிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை மே 3-ம் தேதி சென்னையில் தொடங்கத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது.
இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கில் படப்பிடிப்புகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே விஜய் நெல்சன் படக்குழு படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் பிரமாண்டமாக ஷாப்பிங் மால் செட் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வந்தன. ஊரடங்கு காரணமாக இதன் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இப்போது வேலைகள் தொடங்கியிருக்கின்றன. அதே சமயம் வடபழனி குமரன் காலனியில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் வேறு ஒரு செட் அமைக்கும் வேலைகளும் நடந்து முடிந்துள்ளன. இங்கே பாடல் காட்சி படமாக்கப்பட இருக்கிறது. பூஜா ஹெக்டேவுடன் இதில் நடனமாட இருக்கிறார்.
இதேப்போன்று சூர்யாவை வைத்து பாண்டிராஜ் ஒரு படம் இயக்குகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார்.
கிராமத்து கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதியில் நடைபெற்று வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தப்பட்டது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தை முடித்து, வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் சூர்யா இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கிடைத்துள்ள தகவல்படி இந்த 2 படங்களின் படப்பிடிப்புகளும் வரும் 10ந்தேதி தொடங்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. படப்பிடிப்பில் 100 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்பதால் அதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.