பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை |
நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார். தற்போது கொரோனா காலத்திலும் நீட் தேர்வுக்கான ஆயத்த பணிகள் துவங்க உள்ளன. இந்நிலையில் ‛‛ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் நீட் தேர்வு'' என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் சூர்யா.
அதில் அவர் கூறியிருப்பதாவது : ‛‛மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம். ஏழைகளுக்கு ஒருவித கல்வியும், பணம் படைத்தவர்களுக்கு ஒரு கல்வியும் உள்ள சூழலில் தகுதியை தீர்மானிக்க ஒரே தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது. நீட் நுழைத்தேர்வு வைக்கப்படவதன் மூலம் மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டது. மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை.
நமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய நீட் தேர்வின் பாதிப்பின் தீவிரத்தை உரியவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஆகவே நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையிலான குழுவிடம் neetimpact2021@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு வருகிற ஜூன் 23ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சார வேற்றுமைகள் நிறைந்த நாட்டில் கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.