ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
முப்பது வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் இளம்பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக அறிமுகமானவர் நடிகர் அரவிந்த்சாமி. தற்போது கடந்த சில வருடங்களாக தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் வெற்றிநடை போட்டு வருகிறார். தமிழிலேயே பல படங்களில் நடித்துவரும் அரவிந்த்சாமி தற்போது தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகி வரும் 'ரெண்டகம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் ஓட்டு என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். இதன்மூலம் அவரும் தமிழில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கிறார். ஈஷா ரெப்பா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தை டி.பி.பெலினி என்பவர் இயக்கி வருகிறார்.
அரவிந்த்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ரெண்டகம் படக்குழுவினர் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். நடிகர் குஞ்சாக்கோ போபனும் “நீங்கள் தான் எனது வழிகாட்டி” என குறிப்பிட்டு அரவிந்தசாமியை வாழ்த்தியுள்ளார்.