'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
'பிக்பாஸ்' சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரபரப்பாகப் பேசப்பட்டவர்களில் லாஸ்லியாவும் ஒருவர். அந்நிகழ்ச்சியில் அவரும் மற்றொரு போட்டியாளரான டிவி நடிகர் கவினும் காதலிப்பதாக சர்ச்சை எழுந்தது. அதன்பின் வெளியில் வந்த பின் அந்த காதல் விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது.
இலங்கைத் தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா அங்கு தமிழ் டிவியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்திற்குப் பிறகு இங்கு தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கும் 'பிரண்ட்ஷிப்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் 'கூகுள் குட்டப்பன்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிடும் சினிமா பிரபலங்களில் லாஸ்லியாவும் ஒருவர். நேற்று அவர் பதிவிட்ட புகைப்படங்களுடன், “எளிமையான பெண், இந்த மகிழ்ச்சியான சிரிப்பிற்குப் பின் ஆயிரம் உணர்வுகளை மறைத்து வைத்துள்ளவர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
லாஸ்லியாவைத் தெரிந்த அளவிற்கு அவருடைய அப்பா மரியநேசனையும் ரசிகர்கள் தெரிந்து வைத்துள்ளார்கள். பல வருடங்களுக்குப் பிறகு தனது மகளையும், குடும்பத்தினரையும் சந்திப்பதற்காக கனடாவிலிருந்து பிக் பாஸ் வீட்டிற்கு வந்தவர் அவர். கடந்த வருடம் மாரடைப்பால் காலமாகிவிட்டார். லாஸ்லியாவின் பதிவில் அந்த ஆயிரம் உணர்வுகளில் அப்பாவை இழந்த உணர்வுதான் முதன்மையாக இருக்கும்.