2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? | ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! |

கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தாலும், இன்னும் சிலருக்கு வெளியில் செல்ல பயமாகத்தான் இருக்கிறது. ஒரு சில சினிமா பிரபலங்கள்தான் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார்கள், சிலர் தயாராகி வருகிறார்கள்.
நடிகை ஆண்ட்ரியா கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன்பின் கொரானோவிலிருந்து நம்மை எப்படி காத்துக் கொள்வது என சிறப்பான பத்து ஆலோசனைகளையும் சொன்னார்.
ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டில் இருந்து அவருக்கும் போரடித்துவிட்டது போலிருக்கிறது. நேற்று அசத்தலான காஸ்ட்யூம் ஒன்றை அணிந்து சில புகைப்படங்களையும், வீடியோவையும் பதிவிட்டு, “டிரஸ் பண்ணியாச்சி, ஆனா, எங்க போறது,” எனக் கேட்டிருந்தார்.
ஜுலை மாதத்திலிருந்து தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகத்தினரிடம் உள்ளது. அதுவரையிலும் ஆண்ட்ரியா வீட்டில் தான் அடைந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஐதராபாத்தில் அவருடைய படத்தின் படப்பிடிப்பை இப்போதே ஆரம்பிக்கச் சொல்ல வேண்டும்.
தற்போது தமிழில், “அரண்மனை 3, நோட் என்ட்ரி, வட்டம், மாளிகை, பிசாசு 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.