திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
தமிழ்த் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய்க்கு, ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். ஜேசன் சஞ்சய் தற்போது கனடாவில் சினிமா உருவாக்கம் சம்பந்தமான படிப்பைப் படித்து வருகிறார். மகள் சாஷா பள்ளிப் படிப்பில் இருக்கிறார். சாஷா விஜய் நடித்த 'தெறி' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருப்பார்.
இன்று டுவிட்டரில் 'தெறி' என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதில் 'தெறி' படப்பிடிப்பின் போது சஞ்சய், சாஷா, மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
விஜய்யின் பிறந்தநாள் அடுத்த வாரம் ஜுன் 22ம் தேதி வர உள்ளது. அதனால் ஒருவாரம் முன்னதாகவே விஜய் ரசிகர்கள் தினமும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்ய முடிவு செய்துள்ளனர். தற்போது 'தளபதி பிறந்தநாள்' என்பதும் டிரெண்டிங்கில் உள்ளது.
விஜய் நடித்து வரும் 65வது படத்தின் அப்டேட் எதுவும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளிவருமா என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 'வலிமை அப்டேட்' மாதிரி 'விஜய் 65 அப்டேட்' எனக் கேட்காமல் இருந்தால் சரி.