'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி, உப்பெனா ஆகிய படங்களில் நடித்த விஜய் சேதுபதி, அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் நடிக்கயிருந்தார். பின் ஏதோ சில காரணங்களால் நடிக்கவில்லை. இப்போது அவர் நடிக்கயிருந்த வேடத்தில் பஹத் பாசில் நடிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிக்கயிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. கன்னடத்தில் கேஜிஎப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது தெலுங்கில் பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடியும் தருவாயில் உள்ளது.
அதையடுத்து ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தை முடித்ததும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என்டிஆர். இந்த படத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்கப் போகிறாராம். ஆனால் அவர் வில்லனாக நடிக்கிறாரா? இல்லை வேறு வேடத்தில் நடிக்கிறாரா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.