'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ஜகமே தந்திரம். இப்படம் இந்த வாரம் ஜுன் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தியேட்டர்களில் படம் வெளியாகவில்லை என்ற குறை தனுஷுக்கும் அவரது ரசிகர்களுக்கும் இருந்தாலும் கொரோனா சூழலில் படத்தை மேலும் தாமதம் இல்லாமல் பார்க்க முடிவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். கடந்த வருடம் மே மாதமே இப்படம் வந்திருக்க வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை 190 நாடுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், பிரஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், போலிஷ், போர்ச்சுகீஸ், பிரேசிலியன், ஸ்பானிஷ் (காஸ்ட்டிலியன்), ஸ்பானிஷ் (நியூட்ரல்), தாய், இந்தோனேசியன், வியட்நாமிஸ் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளதாக தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி பெருமைப்பட்டு வருகிறார்கள்.
இப்படத்தின் பெரும்பாலான கதை லண்டனில் நடைபெறுவதால் படத்தை சர்வதேச அளவில் ரசிக்க முடியும் என எதிர்பார்ப்பு உள்ளது. ஓடிடி தளங்கள் வந்த பிறகு பல மொழிப் படங்களையும் பார்க்கும் ஆர்வம் சினிமா ரசிகர்களிடம் வந்துள்ளது. அது போல ஜகமே தந்திரம் படமும் உலக ரசிகர்களைக் கவருமா என்பது சில நாட்களில் தெரிய வரும்.