இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான படம் மகாமுனி. ஆர்யா 2 வேடங்களில் நடித்திருந்த இந்தபடத்தில் இந்துஜா, மகிமா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர் இந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், பல விருதுகளை அள்ளியது குறிப்பாக ஐரோப்பிய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட 700 படங்களுடன் போட்டியிட்டு, இறுதி பட்டியலில் இடம் பிடித்தது.
அந்தவகையில் ஆர்யாவின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்த இந்தப்படத்தை அடுத்து, மீண்டும் சாந்தகுமாருடன் இணைந்து பணியாற்ற உள்ளாராம் ஆர்யா. இதுபற்றி ஆர்யா தரப்பில் கூறும்போது, மகாமுனி படம் ரிலீசான சமயத்திலேயே சாந்தகுமாருடன் இணைந்து இன்னொரு படம் பணியாற்றுவது என்பது, ஏற்கனவே எடுத்த முடிவு தான் என்று கூறுகிறார்கள்.