தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' |

இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றைத் திரைப்படமாக்க சிலர் முயன்று வருகின்றனர். அவற்றில் ஒன்று ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோனே நடிக்க உள்ள ராமாயண் படம். 500 கோடி ரூபாய் செலவில் 3 -டியில் தயாராக உள்ள இந்தப் படத்தை தெலுங்குத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மற்றும் மது, நமித் மல்கோத்ரா தயாரிக்க உள்ளனர். இப்படத்தை பாலிவுட் இயக்குனரான மது மந்தெனா இயக்க உள்ளார்.
ஹிருத்திக் ரோஷன் ராவணன் ஆகவும், தீபிகா படுகோனே சீதை ஆகவும் நடிக்க உள்ள இப்படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை ராமன் ஆக நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள்.
இப்படத்திற்காக அவதார் படத்தில் பணியாற்றிய அமெரிக்காவைச் சேர்ந்த காஸ்ட்டியூம் டிசைன் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம். அக்குழுவினர் ஹிருத்திக் கதாபாத்திரத்திற்கான ஆடைகளை வடிவமைப்பார்கள் எனத் தெரிகிறது.
பிரபாஸ், சைப் அலிகான், கிர்த்தி சனோன் நடிக்கும் ராமாயணக் கதையான ஆதி புருஷ் படத்தை விடவும் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க முடிவெடுத்துள்ளதால் தான் ஹாலிவுட் கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.