'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம் கோப்ரா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் விக்ரம் 8 வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கிறார். லாக்டவுன் காரணமாக தாமதமாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து விட்டு படத்தை வெளியிட தயாராகிக் கொண்டிருக்கிறார் அஜய் ஞானமுத்து.
இந்த நிலையில் இப்படத்தின் படப்படிப்பில் இருந்தபோது விக்ரம் அப்படத்தில் நடிக்கும் ஒரு கெட்டப்புடன் கண்ணாடி முன்பு அமர்ந்திருக்க, அவருக்கு பின்னால் தான் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் அஜய் ஞானமுத்து. அந்த போட்டோவில், மீசை இல்லாமல் தாடி மட்டும் வைத்துள்ள ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார் விக்ரம். இந்த போட்டோவை விக்ரமின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.