கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் |

நடிகை வனிதா விஜயகுமார் ஆகாஷ், ஆனந்தராஜன் ஆகியோரை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். கடந்தாண்டு கொரோனா தாக்கத்தின் இடையே, பீட்டர்பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்தார். தற்போது வடஇந்தியாவை சேர்ந்த விமானி ஒருவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியுள்ளது. இதை வனிதா மறுத்துள்ளார்.
டுவிட்டரில் அவர் கூறுகையில், ‛உங்கள் அனைவருக்கும் ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போதும் சிங்கிளாகவே இருக்கிறேன். இப்படியே இருக்க விரும்புகிறேன். எந்தவொரு வதந்தியையும், பரப்பவோ, நம்பவோ வேண்டாம் எனக் கூறியுள்ளார். அத்துடன் ‛அன்பே சிவம் என மார்பில் பச்சைக்குத்திய தன் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.




