செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தமிழ்படம் விக்ரம் வேதா, இறுதிச்சுற்று போன்ற படங்களை ஒய்நாட் ஸ்டுடியோ சார்பில் வெளியிட்டவர் சசிகாந்த். மண்டேலா படத்தை அடுத்து இவர் வெளியிட உள்ள அடுத்த படம் தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம். படம் பற்றி பேசும் போது : தனுஷ் சினிமா கேரியரில் இந்த படம் மிக பெரிய படம். படம் போஸ்டர் ரிலீஸ் தேதி போட்டே தொடங்கினோம். கிட்டதட்ட இரண்டு வருடம் ஆகிவிட்டது. கொரோனாவால் எல்லாம் முடங்கி போனது. நானும், தனுசும் ரொம் ஆசையாக இந்த படத்தை தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்ய இருந்தோம். ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் மக்களை தியேட்டருக்கு வாங்க என்று சொல்ல முடியாது. வேறு வழியின்றி ஓடிடியில் படத்தை வெளியிட உள்ளோம். இதனால் தனுசுக்கும் எனக்கும் பெரிய கருத்து வேறுபாடு எல்லாம் இல்லை. ஆனால் அவர் ஓடிடியில் வெளியாவதை விரும்பவில்லை என்று கூறினார். தனுஷ் தற்போது அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய இயக்குநரின் த கிரே மேன் படபிடிப்பில் வெளிநாட்டில் இருப்பவர் ஜூலை மாதம் இந்தியா வருவார் என தெரிகிறது