Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமா, டிவி படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி தருமா?

06 ஜூன், 2021 - 19:17 IST
எழுத்தின் அளவு:
Will-government-allow-Cinema-and-TV-Shooting?

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதும் சினிமா படப்பிடிப்புகள், டிவி படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அதன் பின் தற்போது தான் முதல் தளர்வை நாளை முதல் அமல்படுத்த உள்ளார்கள்.

மக்களின் அத்தியாவசியத் தேவைகளான மளிகை, காய்கறி கடைகள், பிளம்பிங், எலக்ட்ரிக்கல், மோட்டார் வாகன ரிப்பேர் கடைகள் ஆகியவற்றைத் திறந்து கொள்ள அனுமதி அளித்துள்ளார்கள். இதன் மூலம் மக்களின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி அடைந்தாலும் அத்தொழிலை நேரடியாகவும், மறைமுகவும் நம்பியுள்ள அனைவரின் வாழ்வாதாரமும் மீண்டும் மீட்டெடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பல தினசரித் தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் குடும்பத்திற்கான உழைப்பை நாளை முதல் தொடங்க உள்ளனர்.

அது போல சினிமா, டிவி ஆகியவற்றில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். சினிமாவை நம்பி தான் தியேட்டர்களும் இருக்கின்றன. அவற்றைச் சார்ந்த பல இணை, துணை தொழில்களும் உள்ளன. கடந்த வருட கொரோனா அலையின் போதே தளர்வுகள் அறிவித்தபின் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அடுத்த தளர்வின் போது சினிமா, டிவி படப்பிடிப்புகளுக்கான அனுமதி கிடைத்தால் அது அத்துறையினருக்கு பேருதவியாக இருக்கும் என எண்ணுகின்றனர். பல பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். அது போலவே தடுப்பூசி உள்ளிட்ட சில வரைமுறை, கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என திரையுலகினரும், டிவி உலகினரும் எதிர்பார்க்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பைக்கிங் எனக்கு சிறகுகளை தருகிறது :  ராய்லட்சுமிபைக்கிங் எனக்கு சிறகுகளை தருகிறது : ... தமிழர்கள் எதிர்ப்பை மீறி வெளியான பேமிலி மேன்-2 : டிரெண்டிங்கில் கோபம் தமிழர்கள் எதிர்ப்பை மீறி வெளியான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
07 ஜூன், 2021 - 06:50 Report Abuse
Mani . V ஆமா, ஆமா, குடும்பத்தை சீரழிக்கும், கேடு கெட்ட சீரியல்கள் இல்லாம எவ்வளவு சிரமாக இருக்கிறது தெரியுமா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in