பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கன்னடப் படமான 'கேஜிஎப்' படத்தின் முதல் பாகம் 2018ம் ஆண்டு வெளிவந்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அவற்றிலும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் இரண்டாம் பாகம் தயாரித்து முடிக்கப்பட்டு இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
படத்தின் டீசர் ஜனவரி மாதம் வெளியாகி உலக சாதனையையும் படைத்தது. 190 மில்லியன் வரவேற்பை இதுவரை பெற்றுள்ளது. படத்தை அடுத்த மாதம் 16ம் தேதி வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார்கள். தற்போதைய கொரோனா சூழலில் அதே தேதியில் வெளியாகுமா அல்லது தள்ளிப் போகுமா என்பது விரைவில் தெரியும்.
இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் படம் பற்றி பிரஷாந்த் கூறுகையில், “உலகமே இந்த கொரோனா தொற்றால் தவித்துக் கொண்டிருக்கிறது. நாமும் மற்றவர்களைப் போலவே நம்மையும், நமது குடும்பத்தையும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வைரஸ் தொற்று நம்மையும் தாக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். இந்த சூழ்நிலையில் மக்களை நாம் எப்படி தியேட்டர்களுக்கு வாருங்கள் என்று கேட்க முடியும். நமது வாழ்க்கையிலிருந்து இந்த இரண்டு வருடத்தை அழித்துவிட வேண்டும் அல்லது பாசிட்டிவ்வாக நினைத்தால் இதை ஒரு பிரேக் என எடுத்துக் கொள்ள வேண்டும்.
கேஜிஎப் 2 படம் எப்போது வெளிவந்தாலும் அது மிகவும் பிரஷ்ஷாக இருக்கும். படத்தின் கதை உலகத்துக்கே பொருத்தமான ஒன்று. ஒரு பீரியட் படமாக இருந்தாலும், இப்போதைய சூழலுக்கு ஏற்ற கதையாக இல்லாமல் இருந்தாலும், அது எப்போது வெளியானாலும் தானாகவே பிரஷ்ஷாக பீல் செய்ய வைக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
படத்திற்கான வியாபாரம் அனைத்து மொழிகளிலும் எதிர்பார்த்த விதத்தை விட அதிகமாகவே நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். 'பாகுபலி 2' படத்தின் வசூல் சாதனையை 'கேஜிஎப் 2' முறியடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற எதிர்பார்ப்பு இந்தியத் திரையுலகினரிடம் ஏற்பட்டுள்ளது.