பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பைப் பெற்ற சில படங்களின் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளன. அவற்றில் சில வரவேற்பைப் பெற்றாலும், சில தோல்வி அடைந்துள்ளன.
இருந்தாலும் ரசிகர்கள் தாங்கள் அடிக்கடி ரசிக்கும் சில படங்களின் இரண்டாம் பாகம் வந்தால் நன்றாக இருக்குமே என சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள். அப்படியான படங்களில் ஒன்று 'பஞ்சதந்திரம்'. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யூகி சேது, ஸ்ரீமன், ரம்யா கிருஷ்ணன், சிம்ரன் மற்றும் பலர் நடித்து 2002ம் ஆண்டில் வெளிவந்த படம்.
இப்படம் வெளிவந்து 19 ஆண்டுகளுக்கு மேலாகியும் இப்போதும் டிவியில் ஒளிபரப்பினால் ரசிகர்கள் ரசித்துப் பார்ப்பார்கள். அந்த அளவிற்கு படம் முழுவதும் நகைச்சுவை விரவியிருக்கும். இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றி 'பஞ்ச' ஐவரில் ஒருவராக நடித்த நடிகர் ஸ்ரீமன்னிடம் ரசிகர்கள் கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது.
அதற்கு அவர், “'பஞ்சதந்திரம்' படத்தின் இரண்டாம் பாகம் வர வாய்ப்பிருக்குமா பலர் என்னிடம் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைக் கேட்கிறீர்கள். எனக்குத் தெரிந்தவரையில் கமல்ஹாசன் சார் முடிவு செய்தால் அது நடக்கும். உங்களைப் போலவே படத்தின் மொத்த குழுவினரும் அது நடக்குமா, நடக்காதா என காத்துக் கொண்டிருக்கிறோம்,” என டுவீட் செய்துள்ளார்.
ஏற்கெனவே, 'இந்தியன் 2' என்ற இரண்டாம் பாகத்தை ஆரம்பித்து கமல்ஹாசன் சிக்கிக் கொண்டுள்ளார். அதனால், இன்னொரு இரண்டாம் பாகமா என அவர் அதிர்ச்சியடையும் வாய்ப்புண்டு. சினிமா சென்டிமென்ட்டுகளை கமல் நம்ப மாட்டார் என்றால் 'பஞ்ச தந்திரம்' படத்தைப் பற்றி அவர் யோசிக்கலாம். ரசிகர்களின் ஆசைக்கும் மேலாக ஸ்ரீமன்னின் ஆசையையும், படக்குழுவினரின் ஆசையையும் கமல் நிறைவேற்றுவாரா ?.