'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாபி சிம்ஹாவின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களை தந்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். குறிப்பாக ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைக்கும்படியான கதாபாத்திரத்தை கொடுத்து நடிக்க வைத்தவர். ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு வந்தபோது கூட அதிலும் பாபி சிம்ஹாவுக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்தவர் கார்த்திக் சுப்புராஜ்.
இந்தநிலையில் தற்போது பாபி சிம்ஹா கன்னடத்தில் முதன்முறையாக நடித்துள்ள '777 சார்லி' என்கிற படத்தை தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலமாக தமிழில் வெளியிடுகிறார் கார்த்திக் சுப்புராஜ். இதுகுறித்த அறிவிப்பை டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் ஹீரோவான ரக்சித் ஷெட்டி இதில் ஹீரோவாக நடித்துள்ளார்.
கிரண்ராஜ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் கன்னடத்தில் உருவாகி இருந்தாலும் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட இருக்கிறார்களாம். இதன் மலையாள பதிப்பை நடிகர் பிரித்விராஜ் தனது நிறுவனம் மூலம் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.