அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சமந்தா நடித்துள்ள ‛தி பேமிலிமேன்-2 வெப்சிரீஸின் டிரைலர் வெளியானதில் இருந்தே மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. தமிழ்ப் போராளிகளை தீவிரவாதிகள் போன்று இந்த தொடரில் சித்தரிக்கப்பட்டிருப்பதாக சொல்லி இதை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் மத்திய அரசை கேட்டுக்கொண்டார்கள்.
இந்த தொடருக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தபோதும் ஜூன் 4-ந்தேதி அமேசானில் வெளியாவது உறுதியாகி விட்டது. இந்த நிலையில், மேலும் சில வெப் தொடர்களில் நடிப்பது குறித்தும் சில டைரக்டர்கள் சமந்தாவை அணுகியிருப்பதாக தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் சமந்தாவோ, தி பேமிலிமேன் 2 தொடருக்கு கிடைக்கும் விமர்சனங்களைப் பொறுத்தே அடுத்த தொடரில் நடிப்பதா? வேண்டாமா? இல்லை எந்த மாதிரியான வேடங்களில் இனிமேல் நடிக்க வேண்டும் என்பது பற்றி முடிவெடுப்பேன் என்று கூறி விட்டாராம். முக்கியமாக, இந்த தொடரில் தனது தோற்றத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு முதன் முதலாக நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதற்கு எந்தமாதிரியான ரியாக்சன் வரப்போகிறதோ என்று சமந்தா பதட்டமான மனநிலையில் இருந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.