2025 வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? |

பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி. இந்தி படங்களில் நடித்து வந்த இவர், காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தற்போது அஜித்துடன் வலிமை படத்தில் நடித்து வருகிறார். அக்ஷய் குமாருடன் பெல்பாட்டம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இந்த நிலையில் ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து முடித்திருக்கிறார். அந்த படம் அமெரிக்காவில் உள்ள தியேட்டர்களில் வெளியாகி நல்ல வசூலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆர்மி ஆப் டெத் என்ற அந்த படத்தை ஜாக் ஷிண்டர் இயக்கி உள்ளார். அவரே ஒளிப்பதிவும் செய்துள்ளார். ஹீமாவுடன் எல்லா புர்மல், டாவே புடிசா, ஓமன் ஹார்ட்விக் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இது ஜோம்பி வகை படமாகும். காமெடி படமான இது 70 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவாகி தற்போது வரை 780 மில்லியன் டாலர் வரை வருமானம் ஈட்டி உள்ளது. இதில் ஹூமா குரேஷி நடித்திருப்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கிறார்கள். இந்தியாவில் இந்தி, தெலுங்கு, தமிழில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனா, டிம்பிள் கபாடியா, அமைரா தஸ்தூர் வரிசையில் இப்போது ஹூமாவும் ஹாலிவுட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.