ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளில் முக்கியமானவர் வீர் சாவர்கர். ஆங்கிலேயர்களை மிக கடுமையாக எதிர்த்ததால் 50 ஆண்டுகளை சிறையிலேயே கழித்தவர். ஆங்கிலேயர்களின் தலைநகரான லண்டனிலேயே அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர். இன்று ஆலமரமாய் வளர்ந்திருக்கும் இந்து மகாசபையை உருவாக்கியவர். பல சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், வீரர்களுக்கும் ரோல்மாடலாக இருந்தவர்.
அவரது வாழ்க்கை வரலாறு சினிமாவாக தயாரிக்கப்பட இருக்கிறது. அவரது 138வது பிறந்த நாளான நேற்று இது முறைப்படி அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை மகேஷ் மஞ்சரேகர் இயக்குகிறார். ஸ்வதந்த்ர வீர் சாவர்க்கர் என்று இந்தப் படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. சந்தீப் சிங் மற்றும் அமித் பி.வாத்வானி இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். ரிஷி வீர்மணி மற்றும் மகேஷ் மஞ்சரேகர் இணைந்து திரைக்கதை எழுதுகின்றனர். நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
மகாத்மா காந்தி, அம்பேத்கர், ராணி லட்சுமிபாய் உள்ளிட்ட பலரின் வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாகி இருப்பது குறிப்பிடத்தக்து.