லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் |

'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க உள்ள இப்படத்தின் அறிமுக டீசர் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமயத்திலேயே வெளிவந்தது. அந்த டீசரைக் கூட காப்பி என்று கமெண்ட் அடித்தார்கள்.
படத்தில் கமல்ஹாசனைத் தவிர சில முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளதென்றும் அவற்றில் நடிக்க மலையாள நடிகர் பகத் பாசில், விஜய் சேதுபதி, பிரபுதேவா ஆகியோரைப் பேசி வருவதாகவும் செய்திகள் வெளிவந்தன.
அவற்றில் இரண்டாவது கதாநாயகன் மற்றும் வில்லன் கதாபாத்திரம் ஆகியவை முக்கியமானவை என்றார்கள். எந்தக் கதாபாத்திரத்தில் யார் என்பதெல்லாம் முடிவாகவில்லை. ஆனால், பகத் பாசில், விஜய் சேதுபதி, பிரபுதேவா என மாறி மாறி பெயர்கள் செய்திகளில் அடிபடுகின்றன. அவர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்கப் போவது யார் என்பது சஸ்பென்ஸ்தான்.
'இந்தியன் 2' படத்தின் குழப்பத்திற்கு ஒரு முடிவு கட்டிவிட்டுத்தான் 'விக்ரம்' கதாபாத்திரத்திற்கான தேர்வில் கமல்ஹாசன் முடிவெடுப்பார் என்கிறார்கள்.