அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் | சர்ச்சையை ஏற்படுத்திய 'இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்' | ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் |

சென்னை : வைரமுத்துவிற்கு கேரளாவில் ஓஎன்வி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்ப, அதை மறுபரிசீலனை செய்வதாக ஓஎன்வி அகாடமி குழு அறிவித்தது. இந்நிலையில் தனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட விருதை திருப்பி தருவதாக வைரமுத்து அறிவித்துள்ளார்.
மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு இந்தாண்டு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் அவரை வாழ்த்தினர். இந்நிலையில் ஏற்கனவே மீடூ புகாரில் சிக்கி பாலியல் குற்றம்சாட்டப்பட்ட வைரமுத்துவிற்கு இந்த விருது வழங்க கேரளாவை சேர்ந்த நடிகைகள் பார்வதி, ரீமா கல்லிங்கள், இயக்குனர்கள் கீது மோகன்தாஸ், பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூகவலைதளங்களில் பலரும் வைரமுத்துவிற்கு விருது வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அவருக்கு அறிவிக்கப்பட்ட விருது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என கேரளாவின் ஓஎன்வி கலாச்சார அகாடமி தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது : கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓஎன்வி விருது இந்தாண்டு எனக்கு வழங்குவதாக அறிவித்தது. நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன். ஆனால் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரால் அந்த விருது மறுமறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது என்னையும், கவிஞர் ஓஎன்வி குறுப்பையும் சிறுமைப்படுத்துவதாக கருதுகிறேன். அதனால் சர்ச்சைகளுக்கு நடுவே இந்த விருதை பெற தவிர்க்கவே விரும்புகிறேன்.
நான் மிகவும் உண்மையாக உள்ளேன். என்னை யாரும் உரசி பார்க்க வேண்டாம். ஓஎன்வி இலக்கிய விருது அறிவிப்பை ஓஎன்வி கலாச்சார அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசு தொகை ரூ.3 லட்சம் பணத்தையும் கேரள முதல்வரின் நிவாரண நிதியில் சேர்த்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அதோடு கேரள மக்கள் மீது நான் கொண்டு அன்பு காரணமாக என் சார்பாக ரூ.2 லட்சம் நிதியை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன். தமிழுக்கும், மலையாளத்துக்குமான சகோதரத்துவம் தழைக்கட்டும். இந்த விருது அறிவிப்பை கேட்டு என்னை பாராட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என் நன்றி.
இவ்வாறு வைரமுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
வைரமுத்துவிற்கு விருதுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல, இப்போது அது மறுபரிசீலனையிலும் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தனக்கு விருது வேண்டாம், அதை ஏற்க மனம் விரும்பவில்லை என்று வைரமுத்து சொல்லியிருந்தால் பரவாயில்லை. விருதை திருப்பி தருகிறேன் என கூறியிருப்பதும், விருது தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுங்கள் என கூறியிருப்பதும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கொடுக்கப்படாத விருதை எப்படி அவர் திருப்பி தர முடியும். அதேப்போன்று பெறாத தொகையை எப்படி அவர் திருப்பி தர முடியும் என பலரும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.




