ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் |
பழம்பெரும் ஹாலிவுட் படத் தயாரிப்பு நிறுவனம் மெட்ரோ கோல்ட்வின் மேயர் என்கிற எம்ஜிஎம் நிறுவனம். சுமார் 4,000 திரைப்படங்களையும், 17,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளது. ஜேம்ஸ் பாண்ட் படங்கள், ராக்கி, பேஸிக் இன்ஸ்டின்க்ட், ரோபோ காப் உள்ளிட்ட உலகப் பெரும் படங்கள் எம்ஜிஎம் தயாரித்தவை.
கடந்த சில வாரங்களாகவே எம்ஜிஎம் நிறுவனத்தை அமேசான் வாங்கவிருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், இரு தரப்புமே இதுகுறித்து உறுதி செய்யாத நிலையில் தற்போது இந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமேசான் நிறுவனம் , எம்ஜிஎம் நிறுவனத்தை 8.45 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இனி எம்ஜிஎம் தயாரிப்புகள் அனைத்தையும் அமேசானில் பார்க்கலாம். இதன் மூலம் உலகின் மிகப்பெரிய ஓடிடி தளம் ஆகிறது அமேசான் ப்ரைம் டைம் நிறுவனம்.