குடியிருந்த கோயில், அண்ணாமலை, சிங்கம் 3 - ஞாயிறு திரைப்படங்கள் | காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது |

தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனின் தம்பி அல்லு சிரிஷ். இவரும் அண்ணனை போன்று சினிமாவில் முன் வரிசைக்கு வர போராடிக் கொண்டிருக்கிறார். அல்லு சிரிஷ் நடித்த ஏபிசிடி படம் வெளியாகி இரண்டாண்டுகள் ஆகிவிட்டது.
கடைசியாக அல்லு சிரிஷ் இந்தியில் டான்ஸ் ஆல்பம் ஒன்றில் தோன்றினார் அந்த வீடியோ ரிலீஸான சில நாட்களிலேயே யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. இந்த ஆல்பம் மூலம் அகில இந்திய ஸ்டார் ஆகிவிட்டார் அல்லு சிரிஷ்.
அந்த சூட்டுடன் தனது புதிய படத்தை அறிவித்திருக்கிறார் அல்லு சிரிஷ். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. அல்லு சிரிஷின் 6வது படம் என்பதால் சிரிஷ்6 என்று தற்காலிக டைட்டில் வைத்திருக்கிறார்கள். இதனை ரவி தேஜா படத்தை இயக்கிய ராகேஷ் சசி இயக்குகிறார். ஜிஏ2 பிக்சர்ஸ் தயாரிப்கிறது.
படத்தில் அனு இம்மானுவேல் அல்லு சிரிஷ் ஜோடியாக நடிக்கிறார். மலையாள நடிகையான இவர் தமிழில் துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்தார். தற்போது மகா சமுத்திரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுவரை 8க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அல்லு சிரிஷின் பிறந்த நாளான வருகிற 30ம் தேதி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படுகிறது.