ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் |

பாகுபலி படத்தின் மிக பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார் நடிகர் பிரபாஸ். அவரது படங்களின் வியாபார எல்லைகளும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து அவரது ரசிகர்கள் அனைவரும் அவர் பாலிவுட், தொடர்ந்து ஹாலிவுட் என மிகப்பெரிய உயரங்களுக்கு செல்ல வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்றபடி கடந்த சில நாட்களாக ஹாலிவுட் ஆக்டர் டாம் குரூஸ் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் பிரபாஸும் நடிக்கிறார் என்கிற தகவல் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
தற்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வரும் பிரபாஸ் இதன் படப்பிடிப்பிற்காக இத்தாலி சென்றபோது, ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரே அவரை சந்தித்து கதை சொன்னதாகவும் சொல்லப்பட்டது. இந்தநிலையில் இயக்குனர் கிறிஸ்டோபர் மெக் குவாரேயின் ட்விட்டர் பக்கத்தில் அவரிடம் இதுகுறித்த தகவல் உண்மையா என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இயக்குனர் கிறிஸ்டோபர் மெக் குவாரே, “அவர் மிக திறமையான மனிதர் தான். ஆனால் நாங்கள் இருவரும் ஒருபோதும் சந்தித்ததே இல்லை” என கூறியுள்ளார். இதன்மூலம் இந்த வதந்திக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.