ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவல் மோசகமாத்தான் உள்ளது. அங்கு சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
சீனியர் நடிகரான சிரஞ்சீவி அவரது சொந்த செலவில் சிரஞ்சீவி ஆக்சிஜன் வங்கி என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். முதல் கட்டமாக 100 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கான்சன்ட்ரேட்டர்கள் ஆகியவற்றை அனந்தப்பூர், குண்டூர் மாவட்டங்களுக்கு அளித்திருக்கிறார். அடுத்து கம்மம், கரீம்நகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை வழங்க உள்ளார். சரியான நேரத்தில் ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள் இனி கவலைப்பட வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரஞ்சீவியின் இந்த ஆக்சிஜன் சேவைக்கு தெலுங்குத் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மட்டும் சில நடிகர்கள் லட்சங்களை வழங்கினார்கள். அதற்கும் கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட சில நடிகர்கள் எதையும் வழங்கவில்லை. மற்றபடி வேறு எந்த நிவாரண உதவிகளையும் எந்த சீனியர் நடிகர்களும் செய்யாமல் இருப்பது அவர்களது ரசிகர்களிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.