திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரையும் இணைத்து, ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ராஜமவுலி. இந்தப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வருகிறது. இதில் கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க, ராமராஜு கதாபாத்திரத்தில் ராம்சரண் நடிக்கிறார்.
ராஜமவுலியின் பட கதை உருவாக்கத்தில் எப்போதும் பக்கபலமாக இருந்து வருபவர் அவரது தந்தையும் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத். சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “ஆர்ஆர்ஆர் படத்தின் ஆக்சன் காட்சிகளை பார்த்தபோது என்னையறியாமல் கண்ணீர் வந்தது. மிகவும் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டுள்ள இந்த ஆக்சன் காட்சிகளை தியேட்டர்களில் பார்க்கும் ரசிகர்களுக்கும் இதேபோன்று வித்தியாசமான உணர்வு ஏற்படும்” என்று கூறியுள்ளார் விஜயேந்திர பிரசாத்.