குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
கொரோனா காலத்தில் தொடர்ந்து உதவிகளைச் செய்து வரும் ஒரே நடிகர் சோனு சூட். கடந்த வருட கொரோனா தாக்கத்தின் போது உதவி செய்ய ஆரம்பித்தவர் இந்த இரண்டாவது அலையில் இன்னும் தீவிரமாக பல உதவிகளைச் செய்து வருகிறார்.
ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகம் உள்ளதால் பல முக்கிய நகரங்களில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களை நிறுவும் வசதியைச் செய்து கொடுக்க முன்வந்துள்ளார் சோனு சூட். இதற்காக பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களுக்கு பத்து நாட்களுக்கு முன்பு ஆர்டர் கொடுத்திருந்தார். அவற்றில் சில வந்தும் விட்டன. அவற்றை அமைக்கும் வேலைகளை தற்போது ஆரம்பித்துள்ளார்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள கர்னூல் மருத்துவமனையில் தற்போது ஒரு உற்பத்தி இயந்திரத்தை அமைத்து வருகிறார். அடுத்து நெல்லூரில் ஒன்றை அமைக்க உள்ளார். ஜுன், ஜுலை மாதங்களில் மற்ற மாநிலங்களிலும் அமைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார் சோனு சூட்.