பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

இந்தியாவில் கடந்த வருடம் கொரோனா முதல் அலை பரவிய சமயத்தில் இருந்தே, பாதிக்கப்பட்ட பலருக்கு, தனது சொந்த செலவில் பலவிதமான உதவிகளை செய்து வருகிறார் பாலிவுட் நடிகர் சோனு சூட்.. தற்போது இரண்டாவது அலை தீவிரமான சமயத்தில் மருத்துவ ரீதியிலான உதவிகளை உடனுக்குடன் செய்து வருகிறார் சோனு சூட்.
சமீபத்தில் ஒடிசாவில் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவமனைக்கு படுக்கை வசதி கேட்டிருந்த ஒருவருக்கு, “கவலைப்படாதீர்கள்.. பெர்ஹாம்பூரில் உள்ள கஞ்சம் சிட்டி மருத்துவமனையில் படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது” என கூறியிருந்தார்.
இவர் இப்படி கூறிய சில நிமிடங்களிலேயே கஞ்சம் மாவட்ட கலெக்டர் தனது டுவிட்டர் பக்கத்தில், “சோனு சூட்டிடம் இருந்தோ, அவரது அறக்கட்டளையில் இருந்தோ எங்களுக்கு எந்த செய்தியும் வரவில்லை. மேலும் இங்கே கஞ்சம் மாவட்டத்தில் படுக்கை வசதி பற்றாக்குறை எதுவும் இல்லை” என கூறியிருந்தார்.
இதற்கு உடனடியாக விளக்கம் கொடுத்து பதிலளித்த சோனு சூட், “சார்.. உங்களை நாங்கள் தொடர்பு கொண்டதாக கூறவே இல்லை.. மாறாக உதவி தேவைப்பட்டவர் எங்களை தொடர்பு கொண்டார், அவருக்கு நாங்கள் படுக்கை வசதி ஏற்பாடு செய்து தந்தோம்.. இதோ அவருடன் உரையாடிய பேச்சுக்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து உங்கள் பார்வைக்காக இதனுடன் இணைத்துள்ளேன். உங்கள் நிர்வாகமும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் நீங்கள் டபுள் செக் பண்ணிக்கொள்ளலாம்” என்றும் கூறியுள்ளார் சோனு சூட்.
இதற்கு பதிலளித்துள்ள கஞ்சம் கலெக்டர், ‛‛உங்கள் செயலை விமர்சிப்பது எங்கள் நோக்கம் அல்ல. 24 மணிநேரமும் கொரோனா நோயாளிக்கு படுக்கை கிடைப்பதை உறுதி செய்ய எங்கள் குழு கஞ்சமில் உள்ளது. படுக்கை கிடைப்பது குறித்து ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் விசாரிக்க வேண்டியது நமது கடமையாகும். நீங்களும் உங்கள் நிறுவனமும் மிகச் சிறந்த வேலை செய்கிறீர்கள்'' என பதிவிட்டுள்ளார்.




