என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா பதானி மற்றும் பலர் நடித்த 'ராதே' படம் நேற்று டிஜிட்டல் தளங்களில் வெளியானது. ஒரு சாதாரண ஆக்ஷன் படத்தை மிக மோசமாக எடுத்திருக்கிறார்கள் என இப்படத்திற்கு விமர்சனங்கள் வந்துள்ளன.
இருந்தாலும் பல லட்சம் சல்மான் கான் ரசிகர்கள் நேற்று படத்தைப் பார்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பணம் செலுத்தித்தான் பார்க்க வேண்டும் என்பதால் அதன் மூலமே பல கோடி வசூலாகியிருக்கலாம் என்றும் பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தற்கொலை செய்து கொண்டு மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ரசிகர்கள் படத்திற்கு எதிராக 'பாய்காட் ராதே' என டுவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.
கடந்த வருடம் சுஷாந்த் மறைந்த போதே பாலிவுட்டில் இருக்கும் 'நெப்போட்டிசம்' தான் அவரது தற்கொலைக்குக் காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். சல்மான் கான், ஆலியா பட், கரண் ஜோஹர் உள்ளிட்ட சிலர் மீது குற்றமும் சாட்டினார்கள்.
கடந்த வருடம் சல்மான் கான் படம் எதுவும் வெளிவராத காரணத்தால் அவர் படங்களுக்கு சுஷாந்த் ரசிகர்களால் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை. எனவே, தற்போது 'ராதே' படத்திற்காக அவர்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்.