ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். தற்போது தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக 'லாபம்' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக 'சலார்' படத்தில் நடித்து வருகிறார்.
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அடிக்கடி வெளிப்படையாகக் கருத்துக்களைப் பகிர்பவர் ஸ்ருதிஹாசன். இதற்கு முன்பு மைக்கேல் கோர்சேல் என்ற வெளிநாட்டவர் ஒருவரைக் காதலித்த போதும் அவருடன் இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
அவரை விட்டுப் பிரிந்து தற்போது சாந்தனு ஹசரிகா என்பவரைக் காதலித்து வருகிறார் ஸ்ருதி. சில வாரங்களுக்கு முன்பு காதலரை சென்னைக்கு அழைத்து வந்து அப்பாவிடமும் அறிமுகம் செய்து வைத்தார் என்று செய்திகள் வந்தன.
இந்த லாக்டவுனில் காதலர் சாந்தனுவுடன் இருப்பதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். அவருடன் இருக்கும் விதவிதமான புகைப்படங்களைப் பகிர்ந்து, “லாக்டவுனில் என்னுடைய சிறந்தவருடன்... நன்றி, இரண்டு பைத்தியங்கள், சுவையான உணவு, கிரியேட்டிவிட்டி, கலை, பேச்சு, மகிழ்ச்சியான அதிர்வுகள்..” எனப் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவுக்கும் ஐந்து லட்சம் பேர் லைக்ஸ் கொடுத்துள்ளார்கள்.