Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா தடுப்புக்கு முதல்வரிடம் ரூ.1 கோடி நிதி வழங்கிய நடிகர் சிவகுமார் குடும்பம்

12 மே, 2021 - 19:44 IST
எழுத்தின் அளவு:
Sivakumar-family-donates-Rs.1-crore-corona-relief-fund-to-CM

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் அதி தீவிரமாக உள்ளது. தடுப்பு மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நோயால் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் அரசு உதவியை தாண்டி பல தன்னார்வலர்கள் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். சில திரைப்பிரபலங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்புக்காக நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் தமிழ் சினிமாவில் முதல் ஆளாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் சூர்யா, கார்த்தி ரூ.1 கோடி நிதி வழங்கி உள்ளனர். இதற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவகுமார், ‛‛கொரோனா தொற்றிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு உதவ எங்கள் குடும்பத்தின் சார்பில் இந்த தொகையை வழங்கினோம். தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். கருணாநிதியை 40 ஆண்டுகளாக சந்தித்து இருக்கிறேன். இப்போது அவரின் வாரிசை முதல்வராக முதன் முதலில் சந்தித்தது மகிழ்ச்சி என்றார்.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
சோனியா அகர்வால் நடிக்கும் ஹாரர் த்ரில்லர் 'கிராண்மா'சோனியா அகர்வால் நடிக்கும் ஹாரர் ... காதலருடன் லாக்டவுனில் ஸ்ருதிஹாசன் காதலருடன் லாக்டவுனில் ஸ்ருதிஹாசன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
19 மே, 2021 - 17:23 Report Abuse
திராவிஷ கிருமி தீயமுக ஆட்சின்னா செல்தட்டி சவக்குமார் குடும்பம் வள்ளல் பரம்பரையாய் மாறிவிடும்.... எல்லாம் அண்டர்கிரவுண்ட் மாபியா காசுதான்...
Rate this:
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
14 மே, 2021 - 11:51 Report Abuse
TAMILAN தமிழகத்தின் அடுத்த சூப்பர்ஸ்டார்ர்கள் சூர்யா மற்றும் கார்த்திக் . மக்குளுக்கு தொடர்ந்து இயற்கை விவசாயத்திலும்(அவர்களது கிராமத்தில் வீடு வீடாக சென்று சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள்) , ஏழை மாணவர்களை படிக்க வைப்பதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
14 மே, 2021 - 11:40 Report Abuse
Sridhar கொரோனா இவ்வளவு நாளா இருந்தும் வராத அக்கறை இப்போ பொங்குதுன்னா, என்ன அர்த்தம்? உண்மையாலுமே திமுகான்னா அவனவனுக்கு ஒரு பயம் இருக்கத்தான் செய்யுது.
Rate this:
இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா
13 மே, 2021 - 21:18 Report Abuse
இராம தாசன் இப்போ புரியுதா ஏன் இந்த குடும்பம் பிபிஜேபி மற்றும் அதிமுக ஆட்சிக்கு எதிருராகவும் கத்திக்கொண்டு இருந்தார்கள் என்று
Rate this:
Believe in one and only God - chennai,இந்தியா
13 மே, 2021 - 11:46 Report Abuse
Believe in one and only God சிவகுமார் அவர்கள் குடும்பம் நாட்டுக்கு உதவி செய்கிறார்கள். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் மற்ற நடிகர்கள் உதவ வேண்டும். ரஜினி ஒரு மராதிகாரர். மும்பையில் மராதிகாரர்கள் பணம் தான் வாழ்க்கை என்று வாழ்பவர்கள். யாருக்கும் ஒரு பைசா உதவ மாட்டார்கள். அது போல் தான் ரஜினியும். தமிழ்நாட்டில் அவரை வளர விட்டது தவறு. ரஜினி ரசிகர்களுக்கு எனது கருத்து கோவத்தை வரவழைக்கும். 1996 -97 காலங்களில் ரஜினி tax free க்காக வைத்திருக்கும் பள்ளிக்கூடத்தில், ஒரு பொங்கல் திருவிழா கொண்டாட நாலாம் வகுப்பு மாணவிக்கு பத்தாயிரம் fees. மற்ற fees லட்சக்கணக்கில். பணக்காரர்கலின் குழந்தைகள் மட்டும் தான் படிக்க முடியும். ஆனால் அது ஒரு டிரஸ்ட் பள்ளி. சிவகுமார் அவர்கள் குடும்பம் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு உதவுகிறார்கள்
Rate this:
Vimalathithan - Abu Halifa,குவைத்
13 மே, 2021 - 15:19Report Abuse
Vimalathithanஅப்பு எல்லாரும் ஏற்கனவே கொடுத்துட்டாங்க இவிக ஒரு வருஷம் லேட்டு தம்பி......
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in