விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? |

சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார் ரஜினிகாந்த். இதையடுத்து அண்ணாத்த படத்தில் டப்பிங் பேசி விட்டு, விரைவில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ரஜினி உடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு செல்பியை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு. தமிழில் கடல், காற்றின் மொழி உள்பட சில படங்களில் நடித்துள்ள லட்சுமி மஞ்சு, பிரபல தெலுங்கு நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன் பாபுவின் மகள் ஆவார்.
இன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள இந்த செல்பியை ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ரஜினி நடித்து வந்தபோது அவரை சந்தித்து எடுத்துள்ளார் லட்சுமி மஞ்சு.