அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்துள்ள பூர்ணா, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெங்கடேஷ், மீனா நடித்துள்ள திரிஷ்யம்-2 தெலுங்கு ரீமேக்கிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அடுத்து தெலுங்கில் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்து வரும் அகந்தா படத்தில் பிரக்யா ஜெய்ஸ்வாலுடன் இன்னொரு நாயகியாக பூர்ணா நடிக்கிறார். கதைப்படி ஐஏஎஸ் அதிகாரியாக நடிப்பவர் பாலகிருஷ்ணாவின் மனைவியாகவும் நடிக்கிறார். படத்தின் இரண்டாம் பாகத்தில் தோன்றும் ஒரு அழுத்தமான வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். இதற்கு முன்பு நடித்துள்ள தெலுங்கு படங்களை விட இந்த படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிப்பதால் தெலுங்கு சினிமாவில் தனக்கு இப்படம் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் படமாக அமையும் என்று நம்புகிறார் பூர்ணா.