என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

ஹிந்தியில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் - திஷா பதானி,  மேகா ஆகாஷ், ஜாக்கி ஷெராப், பரத் உள்பட பலர் நடித்துள்ள  படம் ராதே. இப்படம் மே 13-ந்தேதி ஜீ பிளெக்ஸில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. இப்படத்திற்கு  நான்கைந்து இசையமைப்பாளர்களுடன் தேவிஸ்ரீ பிரசாத்தும் இசையமைத்துள்ளார்.
மேலும்,  தெலுங்கில் அல்லு அர்ஜுன் - பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான துவ்வாத ஜெகானந்தம் படத்தில் தனது இசையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சீடிமார் என்ற பாடலையும் ராதே படத்திற்காக ரீமிக்ஸ் செய்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். இந்த பாடல் தெலுங்கு ரசிகர்களைப்போன்று பாலிவுட் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது சீடிமார் ரீமிக்ஸ் பாடல்  யு-டியூப்பில்100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை செய்திருக்கிறது. இதையடுத்து சல்மான்கான், பிரபுதேவா மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்.
 
           
             
           
             
           
             
           
            