Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமா பிரபலங்களின் அன்னையர் தின வாழ்த்துகள்

09 மே, 2021 - 13:48 IST
எழுத்தின் அளவு:
Celebrities-mothers-day-wish

உலகம் முழுவதும் அன்னையர் தினம் இன்று(மே 9) கொண்டாடப்படுகிறது. அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்று சொல்லுமளவிற்கு நம்மைப் பெற்றெடுத்த அம்மாவை அனைவருமே நேசிப்போம். ஈடு இணையில்லா அவர்களின் பாசத்திற்கு அனைவருமே அடிமைகள் தான். இன்றைய அன்னையர் தினத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் சிலர் சமூகவலைதளங்களில் வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார்கள்.

கமல்ஹாசன்
என் குழையும் மழலையில் துவங்கி இன்று என் நாவில் புழங்கும் தமிழைப்போலவே நீயும், என்னோடு, எப்போதுமே நானாகிய நதி மூலமே தாயாகிய ஆதாரமே.

நடிகர் சரத்குமார்
எல்லையற்ற அன்பையும் ஒப்பில்லா தியாகத்தையும் அளித்து தங்கள் குழந்தைகளையே உலகம் என நேசித்திடும் அன்னைகளுக்கு இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆதரவற்ற தாய்மார்களுக்கு அவர்களது பிள்ளைகளாக இருந்து உதவுவோம்.

நடிகர் மாதவன்
இனிய அன்னையர் தின வாழ்த்துகள், அம்மா மற்றும் ஆய். இந்த உலகத்திலும், சொர்க்கத்திலும் உங்கள் அன்பு, ஆசீர்வாத்தை விட வேறு எந்த சக்தியுமில்லை.

நடிகை ஜனனி
கோபம், வெறுப்பு, பிடிவாதம் என தன் பிள்ளைகள் எதை காட்டினாலும் உன் மீது அன்பு மட்டுமே செலுத்தும் ஒரே ஜீவன் அம்மா. அன்னையத் தின நல்வாழ்த்துக்கள்.

நடிகை விஜயலட்சுமி
கண்ணாமூச்சி விளையாட்டுல எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சிட்டன்னு சொல்றான். எப்படி நிலன்னு கேட்டா, உனக்கும் எனக்கும் இதயத்துக்கும் இதயத்துக்கும் ஒரு கனெக்ஷன் இருக்கு மம்மி, நீங்க எங்க போனாலும் உன்னைக் கண்டுபிடிச்சிடுவன்னு சொல்றான். தாய்மை என்பது பேரின்பம். அம்மாக்களுக்கும் அம்மா வான அப்பாக்களுக்கும், இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.

இயக்குனர் சேரன்

என் அன்னைக்கும் அன்னை போலவே அனைத்து குழந்தைகள் மீதும் அன்பு காட்டும் அனைத்து மகளிர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்..


முதல்படம் இளம் வயதில் தன் அம்மா உடன் நடிகர் சிபிராஜ். இரண்டாவது படம் தன் தாய் உடன் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்.சிபிராஜ்

அம்மா என்பவர் ஒரு குழந்தைக்கு தாய் மட்டுமல்ல, அந்த குழந்தையின் முதல் ஆசிரியை, நல்ல நண்பர் மற்றும் வழிகாட்டி. அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.


தேவிஸ்ரீ பிரசாத்
உலகின் சிறந்த அம்மாக்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள். ஒவ்வொரு நிமிடமும் தன்னலமின்றி, அயராது, உணர்ச்சியுடன், பாசமாக,
எங்கள் கனவுகள் அனைத்தும் உண்மையாக வர அவர்களுக்கு நாம் என்ன செய்தோம். லவ் யு அம்மா.


நடிகை நீது சந்திரா தன் அம்மா உடன்.நீது சந்திரா
அவள் கட்டிப்பிடிக்கும் போது அதில் ஒரு மேஜிக் உள்ளது. அன்பு, அரவணைப்பு, வாழ்வில் நம்பமுடியாத ஒவ்வொரு நிகழ்விலும் என்னை சிறந்ததாக உணர வைக்கும். உலகில் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள். எங்கள் பலமாக இருந்ததற்கு நன்றி. அம்மா நீ தான் என் மன அமைதி. இனிய அன்னையர் தினம். உன்னை நேசிக்கிறேன்.


நடிகை கனிகா தனது அம்மா உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்து கூறியுள்ளார்.


நடிகை மாளவிகா மோகனன் தனது அம்மா உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்து கூறியுள்ளார்.


நடிகை சாயிஷா தனது அம்மா உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்து கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திருமணம் என்ற தவறை செய்ய மாட்டேன் - சார்மிதிருமணம் என்ற தவறை செய்ய மாட்டேன் - ... 'ஷியாம் சிங்க ராய்' - சாய் பல்லவியின் போஸ்டர் வெளியீடு 'ஷியாம் சிங்க ராய்' - சாய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in