படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி |

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதாவின் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார்.
"தேர்தல் வெற்றி எங்கள் இலக்கு அல்ல மக்கள் நலனே இலக்கு தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன்" என்று கமல் தெரிவித்து விட்டார்.
இந்த நிலையில் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி தந்தையின் தோல்வி குறித்து சமூகவலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது: எதுவாக இருந்தாலும் அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் வீழ்ந்து போகிறவர் அல்ல. போராடுகிறவர். என்று குறிப்பிட்டுள்ளார்.