தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' |
கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையில் மக்களுக்கு பல வகையில் உதவி செய்து நிஜ ஹீரோவானார் சினிமா வில்லன் சோனு சூட். தற்போது 2வது அலையிலும் தனது பணியை தீவிரமாக தொடங்கி உள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்த கொரோனா நோயாளியை உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போகுமாறு கூறியுள்ளனர். அருகில் உள்ள மருத்துவமனைகளிலும் இடம் இல்லை. அதனால் உயிருக்கு போராடும் தன்னை காப்பாற்றுமாறு அவர் சோனுசூட்டுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதை அறிந்த சோனுசூட் அவருக்கு ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ததுடன் ஜான்சிக்கு ஆம்புலன்ஸ் விமானத்தை அனுப்பி அவரை ஐதராபாத்துக்கு கொண்டு சேர்ந்தார். தற்போது சிகிச்சை பெற்று வரும் , அவர் உடல்நலம் தேறி வருகிறார். இதனால் சோனு சூட்டுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகிறது.