சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது . வருகிற 7ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் அவருக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்த இருப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திமுக வெற்றி பெறும் ஒவ்வொரு முறையும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், கருணாநிதிக்கு முதல் பாராட்டு விழாவை திரையுலகம் தான் நடத்தும். இந்த முறையும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், நடிகர் சங்கம், பெப்ஸி என அனைத்தும் இணைந்து புதிய அரசுக்குப் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், மு.க.ஸ்டாலின் எங்களுடைய பாராட்டு விழாவில்தான் கலந்து கொள்வார் என்று நம்புகிறோம். சென்னை மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, பெரிய அளவுக்கு முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். சென்னையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது போல், தமிழகத்திலும் பெரிய மாறுதலைக் கொண்டு வருவார். எங்களுடைய கோரிக்கைகளைச் சொன்னால் நிச்சயமாக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்பார் என்று நம்புகிறோம். என்றார்.
தியேட்டர் உரிமையாளர்கள் நேரில் வாழ்த்து
நாளை மறுநாள் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கும் மு.க ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ஐடிரீம்ஸ் மூர்த்தி எம்.எல்.ஏ, டாக்டர். ஹரிகோவிந்த், மதிவானன், படுர் ரமேஷ் ஆகியோர் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.