என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மலையாளத்தில் கடந்த மாதம் மம்முட்டி நடித்த '1' என்கிற படம் வெளியானது. முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில், கடக்கல் சந்திரன் என்கிற பெயரில், கேரள முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மம்முட்டி.. ஒரு நேர்மையான, மக்களுக்கான முதல்வர் எப்படி இருக்கவேண்டும் என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது.. ஆனாலும் இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்தநிலையில், சமீபத்தில் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான கணுமுறு ரகுராம கிருஷ்ண ராஜூ என்பவர் இந்தப்படத்தை பார்த்துள்ளார். இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கட்டாயம் இந்தப்படத்தை பார்க்க வேண்டும்.. ஒரு சிறந்த முதல்வர் எப்படி இருக்கவேண்டும் என்பதை இந்தப்படம் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்” என கூறி அதிர வைத்துள்ளார்.
ஆந்திர மாநில முதல்வராக உள்ள ஒய்.எஸ்.ஆர் ஜெகன்மோகன் ரெட்டியை, எப்படி ஆட்சி செய்யவேண்டும் என, ஒரு திரைப்படத்தை பார்க்கும்படி, அவரது சொந்த கட்சியை சேர்ந்த எம்.பியே அட்வைஸ் செய்துள்ளது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்.பி கணுமுறு ரகுராம கிருஷ்ண ராஜூ, கடந்த சில மாதங்களாகவே முதல்வர் ஜெகன்மோகன் பற்றியும் கட்சி பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது..