மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்களை இயக்கிய சுதா, அடுத்தபடியாக அஜித்திற்கு ஒரு கதை சொல்லிவிட்டு வெயிட் காத்து கொண்டிருக்கிறார். ஆனால் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வரும் அஜித், மூன்றாவது முறையாகவும் வினோத் - போனிகபூர் கூட்டணியில் ஒரு படத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனபோதும் சம்பந்தப்பட்டவர்கள் அதை உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், வலிமை படத்தை முடித்து விட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. காரணம், ஏற்கனவே அஜித்தை சந்தித்து கதை சொல்லிவிட்டு வந்த சுதா, சமீபத்தில் மீண்டும் ஒருமுறை அஜித்துடன் சந்திப்பு நடத்தியிருப்பதாக தகவல். அதனால் வலிமை வெளியானதும் அஜித்தை, சுதா இயக்கும் படம் குறித்த தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சுதா படத்தை முடித்த பின்பு மீண்டும் வினோத் படத்தில் இணையலாம் என்கிறார்கள்.